பன்னிரண்டு வருடம் காத்திருந்து
மாதமொன்று மலையில் தவமிருந்து
உனக்காக ஒரு குறிஞ்சி மலர்
எளிமையாய் சொன்னாய் நிறம்
பிடிக்கவில்லை யென்று, ஆம்
நியாயம் தானே, பிடிக்காத
நிறத்தில் மலர் எப்படி
சூடுவது!!! நியாயம் தானே!!
Wednesday, November 11, 2009
மரண ஓலம் - 3
நெடுநாள் காத்திருந்து,
மெளிதாக கதவுகள் திறந்தேன்
எங்கிருந்தோ பூவாசம் உள்ளே வந்தது
அறை முழுதும் பரவியது,
அறையிலிருந்த அனைத்துடனும்
இரண்டற கலந்தது
மனமுவந்து மகிழும் முன்னே
பூவாசத்திற்கு திறந்த இடைவெளி வழியே
புழுதிக்காற்று அறையில் நுழைந்தது
அறை முழுதும் அலைந்துபின்,
சாளரம் வழியே சென்றுவிட்டது
அறை முழுதும் அலங்கோலமாய்,
என் அறையில் இப்போது
ஒரு வாசமும் இல்லை
அறை முழுதும் அலங்கோலமாய்!!!
மெளிதாக கதவுகள் திறந்தேன்
எங்கிருந்தோ பூவாசம் உள்ளே வந்தது
அறை முழுதும் பரவியது,
அறையிலிருந்த அனைத்துடனும்
இரண்டற கலந்தது
மனமுவந்து மகிழும் முன்னே
பூவாசத்திற்கு திறந்த இடைவெளி வழியே
புழுதிக்காற்று அறையில் நுழைந்தது
அறை முழுதும் அலைந்துபின்,
சாளரம் வழியே சென்றுவிட்டது
அறை முழுதும் அலங்கோலமாய்,
என் அறையில் இப்போது
ஒரு வாசமும் இல்லை
அறை முழுதும் அலங்கோலமாய்!!!
மரண ஓலம் - 2
அடித்தளம் எப்படி வந்தது என்று
தெரியவில்லை, நானே போட்டிருக்கலாம்
அதற்குமேல் ஒவ்வொரு கல்லாக - வைத்து
அழகாக ஒரு மாளிகை கட்டுகிறேன்
இன்னும் பூர்த்தியடையவில்லை,
ஒரு அடுக்கு மீதமுள்ளது
உயரே ஏறி கடைசி அடுக்கை
கட்டுகிறேன், யாரோ குரல்
“மடையா சீட்டுக்கட்டை வைத்து
என்ன செய்கிறாய்”
சீட்டுக்கட்டா!!!!
உண்ர்வதற்குள் அனைத்து அடுக்கும்
உதிர்ந்தது, அதற்கு கீழே நான்
ஒவ்வொரு சீட்டாக எடுக்கும் போது
இலேசாக இருந்தாலும், மொத்தமாக
என் மேல் சற்று கனமாக இருந்தது
என்னால் எழ முடியவில்லை,
மெல்ல கையை மட்டும் உயர்த்தி
பார்க்கிறேன், கனவு கலைந்தது,
என்னதது கையில், திருமண அழைப்பு
அவள் பெயருக்கு அருகில்,
என் பெயரில்லை, சற்று கனமாக இருக்கிறது
என்னால் எழ முடியவில்லை!!!
தெரியவில்லை, நானே போட்டிருக்கலாம்
அதற்குமேல் ஒவ்வொரு கல்லாக - வைத்து
அழகாக ஒரு மாளிகை கட்டுகிறேன்
இன்னும் பூர்த்தியடையவில்லை,
ஒரு அடுக்கு மீதமுள்ளது
உயரே ஏறி கடைசி அடுக்கை
கட்டுகிறேன், யாரோ குரல்
“மடையா சீட்டுக்கட்டை வைத்து
என்ன செய்கிறாய்”
சீட்டுக்கட்டா!!!!
உண்ர்வதற்குள் அனைத்து அடுக்கும்
உதிர்ந்தது, அதற்கு கீழே நான்
ஒவ்வொரு சீட்டாக எடுக்கும் போது
இலேசாக இருந்தாலும், மொத்தமாக
என் மேல் சற்று கனமாக இருந்தது
என்னால் எழ முடியவில்லை,
மெல்ல கையை மட்டும் உயர்த்தி
பார்க்கிறேன், கனவு கலைந்தது,
என்னதது கையில், திருமண அழைப்பு
அவள் பெயருக்கு அருகில்,
என் பெயரில்லை, சற்று கனமாக இருக்கிறது
என்னால் எழ முடியவில்லை!!!
Tuesday, November 10, 2009
மரண ஓலம் - 1
உலகமே இயங்கும் போது
உன்னால் உறைந்து போக முடியுமா
உட்கார்ந்த இடத்தில் மனத்திரையில்
ஆயிரம் கனவுகள் காண முடியுமா
முற்றிலும் உன் அறிவுக்கு எதிராக
உடல் செயல்பட முடியுமா
”தீதும் நன்றும்….” என்ற பெருங்கவிஞரை
மெய்யாய் புரிய வேண்டுமா
நினைக்கும் போதேல்லாம் உனக்கு
வலி அனுபவிக்க வேண்டுமா
காதலித்துப்பார்!! தோற்பதற்காகவாவது
ஒருமுறை காதலித்துப்பார்!!!
உன்னால் உறைந்து போக முடியுமா
உட்கார்ந்த இடத்தில் மனத்திரையில்
ஆயிரம் கனவுகள் காண முடியுமா
முற்றிலும் உன் அறிவுக்கு எதிராக
உடல் செயல்பட முடியுமா
”தீதும் நன்றும்….” என்ற பெருங்கவிஞரை
மெய்யாய் புரிய வேண்டுமா
நினைக்கும் போதேல்லாம் உனக்கு
வலி அனுபவிக்க வேண்டுமா
காதலித்துப்பார்!! தோற்பதற்காகவாவது
ஒருமுறை காதலித்துப்பார்!!!
Subscribe to:
Posts (Atom)