Wednesday, November 11, 2009

மரண ஓலம் - 3

நெடுநாள் காத்திருந்து,
மெளிதாக கதவுகள் திறந்தேன்
எங்கிருந்தோ பூவாசம் உள்ளே வந்தது
அறை முழுதும் பரவியது,
அறையிலிருந்த அனைத்துடனும்
இரண்டற கலந்தது
மனமுவந்து மகிழும் முன்னே
பூவாசத்திற்கு திறந்த இடைவெளி வழியே
புழுதிக்காற்று அறையில் நுழைந்தது
அறை முழுதும் அலைந்துபின்,
சாளரம் வழியே சென்றுவிட்டது
அறை முழுதும் அலங்கோலமாய்,
என் அறையில் இப்போது
ஒரு வாசமும் இல்லை
அறை முழுதும் அலங்கோலமாய்!!!

No comments: