Wednesday, November 11, 2009

மரண ஓலம் - 2

அடித்தளம் எப்படி வந்தது என்று
தெரியவில்லை, நானே போட்டிருக்கலாம்
அதற்குமேல் ஒவ்வொரு கல்லாக - வைத்து
அழகாக ஒரு மாளிகை கட்டுகிறேன்
இன்னும் பூர்த்தியடையவில்லை,
ஒரு அடுக்கு மீதமுள்ளது
உயரே ஏறி கடைசி அடுக்கை
கட்டுகிறேன், யாரோ குரல்
“மடையா சீட்டுக்கட்டை வைத்து
என்ன செய்கிறாய்”
சீட்டுக்கட்டா!!!!
உண்ர்வதற்குள் அனைத்து அடுக்கும்
உதிர்ந்தது, அதற்கு கீழே நான்
ஒவ்வொரு சீட்டாக எடுக்கும் போது
இலேசாக இருந்தாலும், மொத்தமாக
என் மேல் சற்று கனமாக இருந்தது
என்னால் எழ முடியவில்லை,
மெல்ல கையை மட்டும் உயர்த்தி
பார்க்கிறேன், கனவு கலைந்தது,
என்னதது கையில், திருமண அழைப்பு
அவள் பெயருக்கு அருகில்,
என் பெயரில்லை, சற்று கனமாக இருக்கிறது
என்னால் எழ முடியவில்லை!!!

1 comment:

பிரவின்ஸ்கா said...

nanaba..ithai oru kutti kadai yaga matrallam..
murchiyungal..

-Pravinska.