Sunday, March 7, 2010
மூலை தேடி
அறை மூலை சிம்மாசனம்,
அசைவற்ற நான், எறும்பொன்று
கடித்து கவனம் கலைத்தது,
பெரிதாக ஒன்றும் வலிக்கவில்லை.
வழியில் அமர்ந்து விட்டேன் போலும்
நீயும் என்னை மன்னித்துவிடு.
நகர்கிறேன்,
வேறு மூலை தேடி!!
தொடரும்....
சாலையோர காவலை செடி,
உயரம் குறைந்து தலை தூக்கியவாறே,
நடக்கும் பாதையின் ஓரத்தில் உள்ளது
வாகனங்களால் பூசப்பட்ட தூசு நிறம்,
நடப்பவர் கால் பட்டு சிதறிய இலைகள்
நடந்து இறுகிய அடித்தளம்,
இருந்தாலும்! எந்நேரமும்,
காற்றில் ஆனந்த கூத்தாட்டம்,
இன்றும் புது இளம்பச்சை இலைகள்,
மிதித்தாலும், சிதறினாலும் மீண்டும் மீண்டும்
துளிர்க்கும்.. தொடரும்....
சாலையோர காவலை செடி!!!
உயரம் குறைந்து தலை தூக்கியவாறே,
நடக்கும் பாதையின் ஓரத்தில் உள்ளது
வாகனங்களால் பூசப்பட்ட தூசு நிறம்,
நடப்பவர் கால் பட்டு சிதறிய இலைகள்
நடந்து இறுகிய அடித்தளம்,
இருந்தாலும்! எந்நேரமும்,
காற்றில் ஆனந்த கூத்தாட்டம்,
இன்றும் புது இளம்பச்சை இலைகள்,
மிதித்தாலும், சிதறினாலும் மீண்டும் மீண்டும்
துளிர்க்கும்.. தொடரும்....
சாலையோர காவலை செடி!!!
யார் குற்றம்
நடுக்கூடத்தின் ஓரம் இடுக்கில்
இயங்கும் எறும்புகளில் நானும்
நாசியை துளைக்கும் சர்க்கரை வாசனை
வாசனையை தொடர்கிறேன், மிக
அருகில் வாசனையின் உச்சம்,
யாரோ தவறவிட்ட இனிப்பின் மிச்சம்,
ஆஹா இதோ உண்ண போகிறேன்.
தலைக்கு மேலே ஏதோ நிழல்,
என்ன்ன்.......? நச் என்று ஏதோ பெரும்பாரம்
உடல் முழுதும் இறங்கியது....
நான் குற்றுயிரும் கொலையுயிருமாக
நகர்கிறேன்..., யாராவது சொல்லுங்கள்,
இனிப்பிட்டது குற்றமா, இல்லை நாசியிருப்பது
என் குற்றமா.., தவறி மிதித்து குற்றமா...,
மீண்டும் தலைக்கு மேல் ஏதோ நிழல்......
இயங்கும் எறும்புகளில் நானும்
நாசியை துளைக்கும் சர்க்கரை வாசனை
வாசனையை தொடர்கிறேன், மிக
அருகில் வாசனையின் உச்சம்,
யாரோ தவறவிட்ட இனிப்பின் மிச்சம்,
ஆஹா இதோ உண்ண போகிறேன்.
தலைக்கு மேலே ஏதோ நிழல்,
என்ன்ன்.......? நச் என்று ஏதோ பெரும்பாரம்
உடல் முழுதும் இறங்கியது....
நான் குற்றுயிரும் கொலையுயிருமாக
நகர்கிறேன்..., யாராவது சொல்லுங்கள்,
இனிப்பிட்டது குற்றமா, இல்லை நாசியிருப்பது
என் குற்றமா.., தவறி மிதித்து குற்றமா...,
மீண்டும் தலைக்கு மேல் ஏதோ நிழல்......
இசை பருப்பு 1
சினிமா பாடல்கள் பற்றி எழுத சொல்லி நண்பர் சொன்னார். நான் ஒன்றும் அவ்வளவு எழுதி களைத்தவனும் அல்ல, பாடி களைத்தவனும் அல்ல. ஏன் என்னை எழுத சொல்கிறார் என்று யோசிக்கிறேன். கல்லூரி நாட்களில் விடுதியில் சக நண்பர்களுடன் பாடல் கேட்டுக்கொண்டு படுத்திருப்பேன். அது சோம்பேறித்தனத்தின் ஒருவகை வெளிப்பாடு என்பது புரியாமல், நான் ஏதோ இசை ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பதாக தவறாக புரிந்து கொண்டார், நானும் அதை நிரூபிப்பது போல சினிமா பாடல்கள் பற்றி அவ்வப்போது உளறும் வார்த்தைகளில் ஏமாந்து விட்டார். so sad :). ஒரு
Subscribe to:
Posts (Atom)