Sunday, March 7, 2010

தொடரும்....

சாலையோர காவலை செடி,
உயரம் குறைந்து தலை தூக்கியவாறே,
நடக்கும் பாதையின் ஓரத்தில் உள்ளது
வாகனங்களால் பூசப்பட்ட தூசு நிறம்,
நடப்பவர் கால் பட்டு சிதறிய இலைகள்
நடந்து இறுகிய அடித்தளம்,
இருந்தாலும்! எந்நேரமும்,
காற்றில் ஆனந்த கூத்தாட்டம்,
இன்றும் புது இளம்பச்சை இலைகள்,
மிதித்தாலும், சிதறினாலும் மீண்டும் மீண்டும்
துளிர்க்கும்.. தொடரும்....
சாலையோர காவலை செடி!!!

2 comments:

Unknown said...

ya its reall, every one should look at life in this way..... then only they can grow.....
good Venki, keep writing...

பிரவின்ஸ்கா said...

nice one..nanaba..
u r in good mood..

-Pravinska