பெங்களூர் காலை எட்டு மணி,
அருகில் உள்ள நாயர் கடையில் டீ குடித்து கொண்டிருந்தேன். சற்று தொலைவில் ஒரு நாய் குப்பை மேட்டை கிளறி கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர், அறைக்கு வெளியே நின்று தனிமையை ரசித்து கொண்டிருந்த போது, பார்த்த அதே நாய். காலில் ஏதோ அடிபட்டு ஈ மொய்த்து கொண்டிருந்தது. 'ஈ'யை கடிக்க முயற்சித்து முயற்சித்து தோற்றும், உணவை உப்பை மேட்டில் தேடி கொண்டிருந்தது. சிறு வயதில் புண் வந்து அதில் ஈ மொய்த்த போது எவ்வளவு எரிச்சல் வரும் என்று நினைத்தேன், பாவமாக இருந்தது (நாயை பார்த்துதான்). புண்ணின் எரிச்சலுக்கு நடுவே அதன் முக்கிய கடமையான பசியாருதலில் கவனம் செலுத்தி கொண்டிருந்தது. நம்மில் பலரும் இது போல் தான், ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று புண் வந்ததை போல மனதை அழுத்தி கொண்டிருக்கிறது.
Saturday, April 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment