Friday, April 10, 2009

ஆற்றங்கரை சுவடுகள்

எதிர்பாராமல் எதிர்பார்ப்பை
ஏற்படுத்திவிடும் உறவுகள்
ஆற்றங்கரை சுவடுகள்!!!

2 comments:

பிரவின்ஸ்கா said...

நாம் தொட்டுப் பேசி பழகியவரின் கவிதை மீதான நம் நேசமும் ,
நம் மீதான கவிதையின் நேசமும் அதிகமாகவே இருப்பதை
உணர்கிறேன். மூன்று வரிகளில் ஒரு காட்சியையோ, பொருளையோ , முன்னிறுத்துவது மிகவும் கடினம் . அது உங்களுக்கு (உனக்கு)
கைகோர்த்து வந்திருக்கிறது.

பயணக் கவிதை அருமையாக இருக்கிறது . சமீபத்தில் எனக்கு
இங்கேயே நின்று விடுகிறானே என்ற வரியை எழுதிய போது ,
அதை மீண்டும் வாசிக்கும் போது ,
எனக்கு வேறு வேறு காரணத்தையும் , அர்த்தத்தையும் தந்தது .

இப்போது

"பயணம் தொடரும்

ஒருநாள் முடியும்!!!"

என்ற வரிகள் . பயணம் தொடர்ந்து விடுகிறது , விருப்பங்கள் பற்றியோ ,அனுமதி
பற்றியோ கவலை இன்றி .எங்காவது நின்று விடும் , அது முழுமை என்றே படுகிறது. இப்படியெல்லாம் நினைக்க செய்வது தானே கவிதை.

நண்பா .. கவிதைகள் நன்றாக இருக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள்.

இசை பற்றிய உங்கள் (உன் ) உணர்வுகளை , எழுதலாம் என்று தோன்றுகிறது.

எதிர்பார்கிறேன்.


-ப்ரியமுடன்,
பிரவின்ஸ்கா

Unknown said...

It's True