நடுக்கூடத்தின் ஓரம் இடுக்கில்
இயங்கும் எறும்புகளில் நானும்
நாசியை துளைக்கும் சர்க்கரை வாசனை
வாசனையை தொடர்கிறேன், மிக
அருகில் வாசனையின் உச்சம்,
யாரோ தவறவிட்ட இனிப்பின் மிச்சம்,
ஆஹா இதோ உண்ண போகிறேன்.
தலைக்கு மேலே ஏதோ நிழல்,
என்ன்ன்.......? நச் என்று ஏதோ பெரும்பாரம்
உடல் முழுதும் இறங்கியது....
நான் குற்றுயிரும் கொலையுயிருமாக
நகர்கிறேன்..., யாராவது சொல்லுங்கள்,
இனிப்பிட்டது குற்றமா, இல்லை நாசியிருப்பது
என் குற்றமா.., தவறி மிதித்து குற்றமா...,
மீண்டும் தலைக்கு மேல் ஏதோ நிழல்......
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
No one know the answer for it, but it happens every body life......
that is life, thats why its intresting....
aha aha.... Good Venki!!!! cool yer...
immm...ok..nanba
Post a Comment