Wednesday, November 11, 2009
...........................
பன்னிரண்டு வருடம் காத்திருந்து
மாதமொன்று மலையில் தவமிருந்து
உனக்காக ஒரு குறிஞ்சி மலர்
எளிமையாய் சொன்னாய் நிறம்
பிடிக்கவில்லை யென்று, ஆம்
நியாயம் தானே, பிடிக்காத
நிறத்தில் மலர் எப்படி
சூடுவது!!! நியாயம் தானே!!
மாதமொன்று மலையில் தவமிருந்து
உனக்காக ஒரு குறிஞ்சி மலர்
எளிமையாய் சொன்னாய் நிறம்
பிடிக்கவில்லை யென்று, ஆம்
நியாயம் தானே, பிடிக்காத
நிறத்தில் மலர் எப்படி
சூடுவது!!! நியாயம் தானே!!
மரண ஓலம் - 3
நெடுநாள் காத்திருந்து,
மெளிதாக கதவுகள் திறந்தேன்
எங்கிருந்தோ பூவாசம் உள்ளே வந்தது
அறை முழுதும் பரவியது,
அறையிலிருந்த அனைத்துடனும்
இரண்டற கலந்தது
மனமுவந்து மகிழும் முன்னே
பூவாசத்திற்கு திறந்த இடைவெளி வழியே
புழுதிக்காற்று அறையில் நுழைந்தது
அறை முழுதும் அலைந்துபின்,
சாளரம் வழியே சென்றுவிட்டது
அறை முழுதும் அலங்கோலமாய்,
என் அறையில் இப்போது
ஒரு வாசமும் இல்லை
அறை முழுதும் அலங்கோலமாய்!!!
மெளிதாக கதவுகள் திறந்தேன்
எங்கிருந்தோ பூவாசம் உள்ளே வந்தது
அறை முழுதும் பரவியது,
அறையிலிருந்த அனைத்துடனும்
இரண்டற கலந்தது
மனமுவந்து மகிழும் முன்னே
பூவாசத்திற்கு திறந்த இடைவெளி வழியே
புழுதிக்காற்று அறையில் நுழைந்தது
அறை முழுதும் அலைந்துபின்,
சாளரம் வழியே சென்றுவிட்டது
அறை முழுதும் அலங்கோலமாய்,
என் அறையில் இப்போது
ஒரு வாசமும் இல்லை
அறை முழுதும் அலங்கோலமாய்!!!
மரண ஓலம் - 2
அடித்தளம் எப்படி வந்தது என்று
தெரியவில்லை, நானே போட்டிருக்கலாம்
அதற்குமேல் ஒவ்வொரு கல்லாக - வைத்து
அழகாக ஒரு மாளிகை கட்டுகிறேன்
இன்னும் பூர்த்தியடையவில்லை,
ஒரு அடுக்கு மீதமுள்ளது
உயரே ஏறி கடைசி அடுக்கை
கட்டுகிறேன், யாரோ குரல்
“மடையா சீட்டுக்கட்டை வைத்து
என்ன செய்கிறாய்”
சீட்டுக்கட்டா!!!!
உண்ர்வதற்குள் அனைத்து அடுக்கும்
உதிர்ந்தது, அதற்கு கீழே நான்
ஒவ்வொரு சீட்டாக எடுக்கும் போது
இலேசாக இருந்தாலும், மொத்தமாக
என் மேல் சற்று கனமாக இருந்தது
என்னால் எழ முடியவில்லை,
மெல்ல கையை மட்டும் உயர்த்தி
பார்க்கிறேன், கனவு கலைந்தது,
என்னதது கையில், திருமண அழைப்பு
அவள் பெயருக்கு அருகில்,
என் பெயரில்லை, சற்று கனமாக இருக்கிறது
என்னால் எழ முடியவில்லை!!!
தெரியவில்லை, நானே போட்டிருக்கலாம்
அதற்குமேல் ஒவ்வொரு கல்லாக - வைத்து
அழகாக ஒரு மாளிகை கட்டுகிறேன்
இன்னும் பூர்த்தியடையவில்லை,
ஒரு அடுக்கு மீதமுள்ளது
உயரே ஏறி கடைசி அடுக்கை
கட்டுகிறேன், யாரோ குரல்
“மடையா சீட்டுக்கட்டை வைத்து
என்ன செய்கிறாய்”
சீட்டுக்கட்டா!!!!
உண்ர்வதற்குள் அனைத்து அடுக்கும்
உதிர்ந்தது, அதற்கு கீழே நான்
ஒவ்வொரு சீட்டாக எடுக்கும் போது
இலேசாக இருந்தாலும், மொத்தமாக
என் மேல் சற்று கனமாக இருந்தது
என்னால் எழ முடியவில்லை,
மெல்ல கையை மட்டும் உயர்த்தி
பார்க்கிறேன், கனவு கலைந்தது,
என்னதது கையில், திருமண அழைப்பு
அவள் பெயருக்கு அருகில்,
என் பெயரில்லை, சற்று கனமாக இருக்கிறது
என்னால் எழ முடியவில்லை!!!
Tuesday, November 10, 2009
மரண ஓலம் - 1
உலகமே இயங்கும் போது
உன்னால் உறைந்து போக முடியுமா
உட்கார்ந்த இடத்தில் மனத்திரையில்
ஆயிரம் கனவுகள் காண முடியுமா
முற்றிலும் உன் அறிவுக்கு எதிராக
உடல் செயல்பட முடியுமா
”தீதும் நன்றும்….” என்ற பெருங்கவிஞரை
மெய்யாய் புரிய வேண்டுமா
நினைக்கும் போதேல்லாம் உனக்கு
வலி அனுபவிக்க வேண்டுமா
காதலித்துப்பார்!! தோற்பதற்காகவாவது
ஒருமுறை காதலித்துப்பார்!!!
உன்னால் உறைந்து போக முடியுமா
உட்கார்ந்த இடத்தில் மனத்திரையில்
ஆயிரம் கனவுகள் காண முடியுமா
முற்றிலும் உன் அறிவுக்கு எதிராக
உடல் செயல்பட முடியுமா
”தீதும் நன்றும்….” என்ற பெருங்கவிஞரை
மெய்யாய் புரிய வேண்டுமா
நினைக்கும் போதேல்லாம் உனக்கு
வலி அனுபவிக்க வேண்டுமா
காதலித்துப்பார்!! தோற்பதற்காகவாவது
ஒருமுறை காதலித்துப்பார்!!!
Saturday, April 11, 2009
பெங்களூர் காலை எட்டு மணி,
அருகில் உள்ள நாயர் கடையில் டீ குடித்து கொண்டிருந்தேன். சற்று தொலைவில் ஒரு நாய் குப்பை மேட்டை கிளறி கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர், அறைக்கு வெளியே நின்று தனிமையை ரசித்து கொண்டிருந்த போது, பார்த்த அதே நாய். காலில் ஏதோ அடிபட்டு ஈ மொய்த்து கொண்டிருந்தது. 'ஈ'யை கடிக்க முயற்சித்து முயற்சித்து தோற்றும், உணவை உப்பை மேட்டில் தேடி கொண்டிருந்தது. சிறு வயதில் புண் வந்து அதில் ஈ மொய்த்த போது எவ்வளவு எரிச்சல் வரும் என்று நினைத்தேன், பாவமாக இருந்தது (நாயை பார்த்துதான்). புண்ணின் எரிச்சலுக்கு நடுவே அதன் முக்கிய கடமையான பசியாருதலில் கவனம் செலுத்தி கொண்டிருந்தது. நம்மில் பலரும் இது போல் தான், ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று புண் வந்ததை போல மனதை அழுத்தி கொண்டிருக்கிறது.
"இனிய இரவு" குறுந்தகவல்
"இனிய இரவு" சொல்லி குறுந்தகவல்
இன்னும் வரவில்லை,
விடிந்து விட்டது, பரவாயில்லை
இன்று இரவு வரும்
பார்த்துவிட்டே உறங்குகிறேன்!!!
இன்னும் வரவில்லை,
விடிந்து விட்டது, பரவாயில்லை
இன்று இரவு வரும்
பார்த்துவிட்டே உறங்குகிறேன்!!!
என் அறை குண்டு பல்பு
குறைவாகவே ஒளிர்கிறது
ஏதோ சோகம் போலும்,
பகிர்ந்து கொள்ள அறையும்
ஒரு மூலையில் நானும்,
தொல்லை கொடுக்கும் பூச்சிகள்
உதடு மட்டும் விரியிம் சிரிப்பு
அனைத்த பின்பும் எரிகிறது - பின்பு
என்னோடு சேர்ந்து உறங்குகிறது
குண்டு பல்பு
குறைவாகவே ஒளிர்கிறது!!!
ஏதோ சோகம் போலும்,
பகிர்ந்து கொள்ள அறையும்
ஒரு மூலையில் நானும்,
தொல்லை கொடுக்கும் பூச்சிகள்
உதடு மட்டும் விரியிம் சிரிப்பு
அனைத்த பின்பும் எரிகிறது - பின்பு
என்னோடு சேர்ந்து உறங்குகிறது
குண்டு பல்பு
குறைவாகவே ஒளிர்கிறது!!!
Friday, April 10, 2009
பயணம்
பாதை மாறலாம்
கடினம் ஆகலாம்
கவலைகள் புகலாம்
வேறுபாதையும் தோன்றலாம்
மகிழ்ச்சியும் வரலாம்
வராமல் போகலாம்
பயணம் தொடரும்
ஒருநாள் முடியும்!!!
கடினம் ஆகலாம்
கவலைகள் புகலாம்
வேறுபாதையும் தோன்றலாம்
மகிழ்ச்சியும் வரலாம்
வராமல் போகலாம்
பயணம் தொடரும்
ஒருநாள் முடியும்!!!
நம்பிக்கையின் உச்சம்
வறுமை சூழலாலும்
மறையும் இன்பத்தாலும்
மயக்கும் விழியாலும்
வெறுக்கும் உலகாலும்
உடையாது நிற்கும்
களம்மாறும் இளைஞன்
நம்பிக்கையின் உச்சம்!!!
மறையும் இன்பத்தாலும்
மயக்கும் விழியாலும்
வெறுக்கும் உலகாலும்
உடையாது நிற்கும்
களம்மாறும் இளைஞன்
நம்பிக்கையின் உச்சம்!!!
Subscribe to:
Posts (Atom)